திருவல்லிக்கேணி மனநல காப்பகத்திற்கு உதவினோம்.!

மனிதநேய நண்பர்களுக்கு வணக்கம்!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மனநல காப்பக்கத்திற்கு உதவி கேட்டு நமக்கு அழைப்பு வந்தது. அங்கு போய் பார்த்தோம்.

அதை நடத்தும் நிர்வாகியை நமக்கு ஏற்கனவே தெரியும்.உணவு மற்றும் சுகாதாரத்திற்கு
முக்கியத்துவம் தருபவர்.

அந்த காப்பகம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.அதை சுற்றிப் பார்த்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தோம்.

அந்த நிர்வாகி நம்மிடம் பேசுகையில் , “இங்கு உள்ள அனைவருக்கும் தற்போது தரையில் அமர வைத்துதான் உணவு வழங்குகிறோம்.
60 பேர் ஒரே தடவையில் அமர்ந்து சாப்பிடும் வகையில் டேபிள், சேர்கள் தேவைப்படுகிறது” என்று கேட்டுக் கொண்டார்.

அவரது தேவையை நண்பர்களிடம் பகிர்ந்தோம்.

கருணை உள்ளம் கொண்ட மனித நேய சகோதரி ரேணுகா தேவி (சூளைமேடு) தம்முடைய பங்களிப்பாக 30 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் டேபிள் மற்றும் சேர்கள் வாங்கிக் கொடுத்தார்.

இவற்றை நானும் பால்ய நண்பர் கோவிந்தராஜும் எடுத்து சென்று அந்த காப்பகத்தில் வழங்கினோம்.
இதே போல, மேலும் 30 பேர் அமர்ந்து உண்ணும் வகையில் டேபிள் சேர்களை வாய்ப்பு இருப்போர் வழங்கும்படி வேண்டுகிறோம். பழைய ஃபர்னிச்சர்களே போதுமானது.

டேபிள், சேர்ளை உடனடியாக வாங்கி கொடுத்து உதவிய மனித நேய சகோதரி ரேணுகா தேவி அவர்களுக்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள்.!

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
10.07.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91