சென்னை, புரசைவாக்கத்தில்
தன் மகனை அண்மையில் பறிகொடுத்த முதிய வயது தாய் தனியாக வசித்து வருகிறார்.
அவருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
தனியாக சமைத்து உண்டு வாழ்ந்து வருகிறார்.
நம்மை தொடர்பு கொண்டு இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை கேட்டார்.
மனிதநேயமிக்க அன்பு தங்கை கிரேஸ் அவர்களிடம் இந்த தாயின் கோரிக்கையை முன் வைத்தோம்.
கிரேஸ் அவர்கள் ரூபாய் 1500 அனுப்பி வைத்தார்.
இந்தத் தொகைக்கான
மளிகைப் பொருட்களை வாங்கி அந்த தாயாரிடம் ஒப்படைத்தோம்.
மனிதநேயமிக்க கிரேஸ் அவர்களை அந்தத் தாயார் மனதார வாழ்த்தினார்.
இது போல நிறைய உதவிகளை சகோதரி கிரேஸ் செய்துள்ளார்.
நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.!

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி(திருக்குறள் 226)
பொருள்:
இல்லாதவர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடைய பசியை போக்க வேண்டும்; அதுதான் பொருள் பெற்றவர் தம் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 25.01.26




