அவரை ட்ரை சைக்கிளில் வைத்து அவருடைய மாணவி தள்ளி செல்வார். ஒரு மாற்றுத் திறனாளி கணவரை இந்த அளவுக்கு கவனித்துக் கொள்கிறாரே என்று நான் யோசித்தது உண்டு.
அந்த மாற்றுத்திறனாளியின் பெயர் மாசிலாமணி (54). கொசப்பேட்டையைச் சேர்ந்தவர்.
காலையில் தையல் கடையில் இறக்கி விட்டு விட்டு மனைவி சென்று விடுவார். மீண்டும் மாலையில் வந்து ட்ரை சைக்கிளில் அவரை உட்கார வைத்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
இளம் வயதிலேயே போலியோவால் இரு கால்களையும் இழந்த மாசிலாமணி தன் உழைப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு நாம் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து நண்பர்களிடம் தெரிவித்தேன்.
மனிதநேயர் செல்வமணி (திருவாரூர்) ட்ரை சைக்கிள் வாங்கி கொடுத்தார்.
மனிதநேயர் தேவராஜ் (சைதாப்பேட்டை) ஒரு தையல் மெஷின் வாங்கிக் கொண்டு என் வீட்டுக்கே வந்து விட்டார். அவருடைய கையாலேயே அதைக் கொடுக்க முடிவு செய்தோம்.
மாசிலாமணியின் வீட்டுக்குச் சென்று இரண்டு பொருட்களையும் ஒப்படைத்தோம்.
அருமை நண்பர் மனித நேயர் பொறியாளர் கோவிந்தராஜும் சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷும் உடன் வந்திருந்தனர்.

இனி மாசிலாமணி சுயமாக இயங்குவார். சுய தொழில் செய்வார். நினைத்த இடத்துக்கு கை பெடல் உள்ள ட்ரை சைக்கிளில் அவரே போய் வருவார்.
மாசிலாமணியும் அவருடைய மனைவியும் குடும்பத்தாரும் இரண்டு மனித நேயர்களுக்கும் நன்றி சொன்னார்கள். நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியை நாமும் தெரிவித்துக் கொள்வோம்.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது”. (திருக்குறள் 101)
பொருள்:
பிரதிபலன் எதிர்பாராமல் செய்யப்படும் உதவிக்கு கைமாறாக மண்ணுலகத்தையும் வானுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 17.09.25




