முப்பது பார்வையற்ற சகோதர- சகோதரிகளுக்கு நவீன ஊன்றுகோல் தேவைப்படுகிறது! வாங்கிக் கொடுத்து உதவுங்கள், மனிதநேய நண்பர்களே.!

கருணை உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம், நாம் மாற்றுத்திறன் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி வருவதை அறிவீர்கள்.

பார்வையற்ற-மாணவ மாணவியர் மற்றும் வேலை பார்க்கும் வியாபாரம் செய்யும்
கண் பார்வை இல்லாதவர்கள் ஊன்றுகோல் உதவியுடன் சாலைகளில் தட்டு தடுமாறி நடப்பதை பார்த்து வேதனைப்பட்டு இருக்கிறோம்.

தற்போது இவர்களுக்கு நவீன ஊன்று கோல் வந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளம் அல்லது பெரிய தடுப்பு சுவரில் இந்த ஊன்றுகோல் படும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பி பார்வையற்றோருக்கு தெரிவிக்கிறது.

ஏழை எளிய மக்கள் நிரம்ப வாழும் சென்னை கண்ணகி நகரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் ஏராளமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
அவர்கள் அங்கம் வகிக்கும் பார்வையற்றோர் நல சங்கத்தினர் நம்மை தொடர்பு கொண்டு முப்பது பேருக்கு நவீன ஊன்றுகோல் கேட்டுள்ளனர்.

நவீன ஊன்று கோல் ஒன்று என்ன விலை ஆகிறது என்று இது தொடர்பான தயாரிப்பு நிறுவனங்களிடம் விசாரித்தோம். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய தரமான ஊன்றுகோல் ஒன்றின் விலை ரூ 6000
என்று தெரியவந்தது.

இவர்களுக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுத்து உதவிக்கரம் நீட்டுங்கள் மனித நேய நண்பர்களே.!

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.!

– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 24.12.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91