பிளஸ் டூ முடித்த ஏழை குடும்பத்து மாணவர்: உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் வகையில், ரு 20,000 கல்லூரிக் கட்டணம் செலுத்தினோம்.!

வடசென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்மணி ஒரு துப்புரவுத் தொழிலாளி.
கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேரும் தருணம். ஒருவர் ஒன்பது வகுப்பில் படிக்கிறார்.

இப்பெண்மணி தன் மகன்கள் இருவரையும் போராடி படிக்க வைக்கிறார்.

வடசென்னையில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை பாட பிரிவில் இடம் கிடைத்து விட்டது. ஆனால் ரூ.20,000 கட்டணம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

ஏராளமான ஏழை, எளிய மாணவ மாணவியர் உயர் படிப்புக்கு உதவி செய்த மனிதநேயர் ஞானப்பிரகாஷ் ஐயாவிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக ரூபாய் 20,000தொகை தந்து அந்த மாணவனை கல்லூரியில் சேர்த்து விடச் சொன்னார்.

அக்கல்லூரி நிர்வாகியிடம் விவரத்தைக் கூறினேன். அவர் கட்டணத்தை குறைத்துக் கொண்டு கல்விக் கட்டணம் மற்றும் இரண்டு தேர்வுக் கட்டணம் ஆக மொத்தம் ரூபாய் 17,450 கட்டுப்படி சொன்னார்.
அவ்வாறே கட்டிவிட்டு, மீதி தொகையில் இரண்டு செட் புத்தாடை, கல்லூரிப் பை, படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்தேன்.

அவனும் அவனுடைய தாயாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“அரசாங்கம் கூட உடனடியாக இப்படி உதவாது என்று சொல்லி ஞானபிரகாஷ் ஐயாவுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.!

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.(திருக்குறள் 102)

பொருள் :
உரிய காலத்தில் செய்யப்படும் உதவியின் அளவு சிறிது ஆயினும் அதன் தன்மையை அளக்கும் போது அது உலகை விடவும் பெரிதாகும்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
22.07.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91