நுரையீரல் தொற்றால், பாதிக்கப்பட்டு சுவாசிக்க ஆக்சிஜன் கொடுத்து உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார், மல்லி(ஸ்வரி)!

உதவிக் கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

சினிமாத் துறையில் பணியாற்றும் கலைஞர்கள் பெரும்பாலானோர்
போராடி வாழ்க்கை பயணத்தை ஓட்டுபவர்களே!
இந்த வரிசையில் நடிகை மல்லி என்கிற மல்லிஸ்வரியும் அடங்குவார்.

15, 20 ஆண்டுகளுக்கு முன்பு
திரைத்துறையில் நடிகையாக வலம் வந்த இவருக்கு ஓரளவு வருமானம் வந்தது.

பி .வாசு, சுந்தர் சி
உள்ளிட்ட இயக்குநர்கள் தயாரித்த படங்கள் உள்பட 21 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கவுண்டமணி ,செந்தில்
ஆகியோருடன் நகைச்சுவை காட்சிகளில்
நடித்து பாராட்டைப்
பெற்றவர்.

கடல் பகடை, அலைகள், அலை ஓசை
உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்துள்ளார்.

இதைத் தவிர 15க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்கள் மற்றும் இந்தி மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்புத் துறையில் வாய்ப்பு வாங்கியதும் குடும்பத்தில் வருமானமும் குறைந்தது. ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வாங்குகிற சம்பளம் அன்றாட செலவுக்கு சரியாக இருந்தது.

இந்த நிலையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஓரளவு குணமடைந்து
வீடு திரும்பிய இவருக்கு
மருத்துவர் ஆலோசனைப்படி குறைந்தது இரண்டு மாதங்கள் வீட்டிலேயே
ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவி ஆக்சிஜன் கொடுக்க வேண்டும்.
அது குறித்து விசாரித்துள்ளார்கள்.
தாம்பரம் அருகில் இவர் வீடு இருப்பதால் அங்கு உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்யும் நிறுவனத்தினர் ஆக்சிஜன் அடங்கிய சிலிண்டர்
ரூபாய் 28000 ஆகும் என்று கூறியுள்ளார்கள்.
ஆக்சிஜன் தீர்ந்ததும்
ரூபாய் 3000 கொடுத்து நிரப்பிக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்கள்.

இந்த சகோதரிக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆக்சிஜன் தேவைப்படும் என்று தெரிகிறது.

கையில் எவ்வித பணமும் இல்லாத நிலையில் உதவி கேட்டு நம்மிடம் தொடர்பு கொண்டார்.

இந்த சகோதரிக்கு உதவிக் கரம் நீட்டி இவருடைய உயிரைக் காப்பாற்றுங்கள் மனிதநேய நண்பர்களே.!
— புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
01.03.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91