இந்த நோயாளிக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது.
மருத்துவர்கள் ஒரு உபகரணத்தை வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் படி ஆலோசனை கூறினர்.
அந்த உபகரணத்தை வாங்கி
சுவாசப் பயிற்சி கொடுத்தால் மூச்சுத் திணறல் குறையும்
என்று கூறியிருந்தனர்.
இதன் விலை ரூபாய் 3000. அந்தத் தொகையையும் மனிதநேயர் நீலேஷ்
அனுப்பி வைத்தார்.
நாம் அந்த உபகரணத்தை வாங்கி அந்த நோயாளியின் உதவியாளரிடம் வழங்கினோம். மனிதநேயர் சம்பத் (அசோக் நகர்) உடன் வந்திருந்தார்.
அந்த மருத்துவ உபகரணத்தை நோயாளி பயன்படுத்தத் தொடங்கியதும் மூச்சுத்திணறல் நீங்கி நிம்மதி அடைந்தார்.

மனிதநேயர் நீலேஷ் ஏற்கனவே நம் மூலமாக நலிவடைந்த பல பேருக்கு உதவிகள் செய்தவர்.
அவருக்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
08.03.26




