மனித நேயர்களின் ஒருங்கிணைந்த நற்செயல்களால் இது சாத்தியமாயிற்று.!!
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர்
தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து
சரவணன் என்ற சமூக ஆர்வலர் நம்மைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
மனசுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒரு மூன்று சக்கர சைக்கிள் இருந்தால் கண்டிப்பாக அவரால் பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு கை கால் வலுவாக உள்ளது.
இந்த முதியவருக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி கொடுங்கள் மனிதநேய நண்பர்களே
என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
மனிதநேயர் ஸ்ரீராம் சார் (உதவும் கைகள்)
ரூபாய் 10 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

பெயர் குறிப்பிடாதத மூன்று மனிதநேயர்கள் ரூபாய் 1,000, ரூபாய் 1000, ரூபாய் 500
அனுப்பி வைத்தனர்.
அவருக்கு உதவி செய்யும் நற்செயலில் நம்முடன் மனிதநேயர் சம்பத் (அசோக் நகர்) மனிதநேயர் சசி சரவணன், கருணை உள்ளம் கொண்ட எஸ்தர் ராணி
இணைந்து கொண்டனர்.
தலையும் தாடியும் வளர்ந்து அதுவே அவருக்கு ஒரு சுகாதார சீர்கேடாக இருந்தது.
ஒரு முடி திருத்துபவர் உதவ முன் வந்தார்.
தலை முடியையும் தாடியையும் நன்கு குறைத்துக் கொடுத்தார்.
அவரை வெந்நீரில் குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தோம். அறுசுவை உணவு வாங்கி உண்ண வைத்தோம்.
எப்போதும் இல்லாத குளிர் சென்னையை வாட்டி வருவதால், குளிரைத் தாங்குகிற ஆடையும் வாங்கிக் கொடுத்தோம்.
வேப்பேரி போலீஸ் நிலையத்தில் இருந்து தலைமைக் காவலர் கார்த்திகேயன், காவலர் தேவி மாலா,
மனித நேயர் தேசிகன்
முன்னிலையில்
புதிய மூன்று சக்கர வாகனத்தில் அமர வைத்து அவரை ஓட்ட வைத்தோம். சாலையில் கைகளை ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து சென்று கொண்டிருந்த
அவர் இருக்கைகளாலும் பெடல் செய்து மூன்று சக்கர வாகனத்தை அருமையாக ஓட்டினார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கருணை உள்ளம் கொண்ட எஸ்தர் ராணி இவருக்கு தினமும் காலை உணவு வழங்க வேண்டியது என் பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டார்.
மதிய உணவு நான் வழங்குகிறேன் என்று மனிதநேயர் சசி சரவணன் பொறுப்பேற்றார்.
இயற்கையின் ஓர் அங்கம்தான் மானுடன். அவர்களில் தான் எத்தனை வேறுபாடு,
மாறுபாடு. சாத்தன் என்கிற ஒரு சக மனிதனுக்கு நம்மால் முடிந்த உதவிகளை முழுமையாக செய்தோம.சமூகம் தொடர்ந்து செய்யும் என்று நம்புவோம்.
இந்த நற்செயல் பல நல்ல உள்ளங்களின் ஒருங்கிணைப்பால்
சாத்தியம் ஆயிற்று.
அனைவருக்கும் உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள். மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஸ
மனிதநேயர் ஸ்ரீராம் சார் (உதவும் கைகள்) செய்துள்ள உதவிகள் கணக்கில் அடங்காது.
அவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.!
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.(திருக்குறள் 36)
பொருள்:
அன்றைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் போதெல்லாம் அறச்செயல்களே செய்து செய்துவிட வேண்டும். அதுதான் ஒருவருடைய இக்கட்டான தருணத்தில் உறுதுணையாக வந்து நிற்கும்.!
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 25.01.26




