தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயமிக்க சுபாஷினி அம்மையார் நம்முடன் இணைந்து பல்வேறு நல்ல செயல்கள் செய்து வருபவர்.
அவர் நம்மை தொடர்பு கொண்டு,பட்டாபிராம் அருகே ஒரு உட்புற பகுதியில் 80 வயது முதியவர், ஷீட் போட்ட ஒரு வீட்டில் நீண்ட காலம் தனியாக வசித்து வருவதாகவும், மின் இணைப்பு வசதி இல்லாத அந்த வீட்டில் தானே சமையல் செய்து,கொசுத் தொல்லையுடன் இருட்டில் வாழ்ந்து வருவதாகவும் அவருக்கு உதவி செய்யுமாறும் கேட்டார்.
நாம் நேரில் அங்கு சென்று பார்த்த போது உண்மையிலேயே மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
இந்த நவீன காலத்தில் இவ்வளவு நல்ல மக்கள் சுற்றிலும் வாழும் சூழலில், மின் இணைப்புடன் குறைந்த பட்சம் ஒரு டியூப் லைட் மற்றும் மின்விசிறியுடன் அவர் வாழ வேண்டும் என்று விரும்பினோம்.

அவர் தனியாக சமையல் செய்வதால், கேஸ் இணைப்பு கொண்ட அடுப்பும் வாங்கி கொடுக்கலாம் என்ற முடிவுடன் திரும்பினோம்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மனித நேயர்கள் உதவியுடன் அங்குள்ள மின்சார அலுவலகத்தின் மூலம் அந்தப் பெரியவரின் “ஷீட்” வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்தோம், மின்விசிறி, டியூப் லைட் உள்ளிட்ட அவருக்கு உதவக்கூடிய அனைத்து சாதனங்களையும் பொருத்திவிட்டோம்.
கடைசியாக, ஒரு கட்டில், இரண்டு தலையணை குளிர்காலத்தில் உதவ இரண்டு பெட்ஷீட் தேவைப்படுகிறது. இதை வாங்கித் தந்து அவருடைய கடைசி கால தருணங்களில் அவர் நிம்மதியாக நன்கு படுத்து உறங்க உதவும் படி மனித நேய*நண்பர்களை அன்புடன் வேண்டுகிறோம்.!
. – புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
16.12.25




