திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி
தாலுகாவைச் சேர்ந்த தியாகராஜன்(62) என்ற ஏழை விவசாயி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு உதவியாக அவருடைய மனைவியும் மகளும் வந்துள்ளனர். மகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன்.
குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தந்தைக்கு பணியிடை செய்து வருகிறார்.
கீமோதெரபி கொடுத்து 21 நாள் கழித்து வரச் சொல்லி உள்ளார்கள்.
கீமோதெரபியால் மிகவும் உடல் நலம் குன்றியுள்ள அவர் ரெயிலிலோ பேருந்திலோ செல்ல முடியாத நிலையில் உள்ளார்.
செலவுக்கு ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே கொண்டு வந்திருந்தார்கள்.
சில பரிசோதனைகளுக்காகவும் உணவுக்காகவும் அதை செலவழிக்க வேண்டியதாயிற்று.

இப்போது ஆம்புலன்ஸில் மட்டுமே அவரை அழைத்துச் செல்ல முடியும்.
அவர்கள் பணம் இல்லாமல் தவித்தது
மனதுக்கு வேதனையாக உள்ளது.
இந்தப் பெரியவரை ஆம்புலன்சில்
அழைத்துச் செல்வதற்கு உதவிக்கரம் இருக்குமாறு மனிதநேய நண்பர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739.
04.03.26




